dvdfv
Monday, May 27, 2013
மின் விசிறியின் இறகுகள் பின்பக்கமாகச் சுற்றுவதுபோல் தோன்றக் காரணம் என்ன?
சின்ன உதாரணம் மூலம் பார்க்கலாம். இன்றைய நவீன குழல் விளக்குகள் தொடர்ந்து பிரகாசிப்பதில்லை. அவை விட்டு விட்டு ஒரு நொடிக்கு 50 தடவை வீதம் பிரகாசிக்கின்றன. ஆனாலும், நமது கண்களின் பார்வை நிலைப்புத் தன்மையால் நமது பார்க்கும் உருவத்தின் பிம்பம் நமது பார்வையில் பத்தில் ஒரு பங்கு விநாடி வரையில் தங்கும் காரணத்தினால் நாம் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இந்த இயல்பைத்தான் காற்றாடியின் இறகுகள் உணர்த்துகின்றன. காற்றாடியின் இறகுகள் பூரணச் சுற்றுகள் பிரதிபலிப்பதில் அடர்வு எண்ணுடன் ஒத்துப் போகுமேயானால் இறகுகளை அத்துடன் ஒன்றிய நிலையில் பார்க்கிறோம். அறிவியல் அறிஞர்கள் இந்த நிலையை ‘ஸ்ட்ரோயோஸ்கோபிக் தன்மை’ என்று கூறுவர். ஆனால், எப்பொழுது இந்தச் சமநிலை மாறுபடுகிறதோ அப்பொழுதெல்லாம் மின் விசிறியின் இறகுகள் முன்புறமோ அல்லது பின்புறமோ சுழல்வது போன்று தெரியும்.
வவ்வால் Bat
உலகத்தில்
இறைவனால் படைக்கப்பட்டுள்ள பாலூட்டிகளில் பெரும்பாலான இனங்கள்
அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இன்றளவிலும் லட்சக்கணக்கான
ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான புதைப்பொருள் எலும்புக்கூடுகளை
கண்டுபிடிக்கின்றனர். கிட்டதட்ட ஒரு லட்சம் பாலூட்டிகள் இந்த உலகில்
இருந்ததாகவும் அவற்றில் பெரும் பகுதி அழிந்துவிட்டதாகவும் தற்போது 4000
பாலூட்டிகள் மாத்திரமே உள்ளதாகவும் கூறுகின்றார்கள். மேலும் இவற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவ
தாகவும் இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைக்கு பிறகு பல உயிரினங்களை உயிரியல் கண்காட்சிகளில் மாத்திரமே காணக்கூடிய நிலை ஏற்படும் என்றும் திட்ட வட்டமாக கூறுகின்றார்கள். ஏனென்றுச் சொன்
னால் பல விலங்குகளின் நிலை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருப்பதே இதற்குச் சான்றாகும். இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது வவ்வால் இனமாகும். நாம் இந்தத் தலைப்பில் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் மற்றவற்றிலிருந்து வவ்வால் எந்த பண்புகளில் எந்த தகவமைப்பில் வேறுபட்டுள்ளது என்பதை விரிவான முறையிலே பார்ப்போம்.
“பறக்கக்கூடிய” தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான்
குட்டிப்போட்டு பறக்கக்கூடியத் தன்மையைக்கொண்ட இந்தப்பாலூட்டி பல அதிசியத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கீழ் காணும் படம் வவ்வால் தன் சிறகை(கையை) விரித்து பறக்கக்கூடிய காட்சி.
உலகில் உள்ள பாலூட்டிகளில் மிகச்சிரியது பம்பல்பீ வவ்வால் ஆகும். தங்கள் உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக் உண்ணக்கூடிய அதிசயத்திலும் அதிசயம்.
வவ்வால்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளின் உருவ அமைப்பை வைத்து பெரிய வவ்வால்கள் (Mega bats) எனவும் சிரிய வவ்வால்கள் (Mictro bats) எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய வவ்வால்களில் குறிப்பிடத்தக்கது பிளையிங் ஃபாக்ஸ் (Flying fox) வவ்வால் ஆகும். இவை அதிகபட்சமாக 41 செ.மீ வரை வளரக்கூடியது. சிறிய வகை வவ்வால்களில் குறிப்பிடக்தக்கது பம்பல்பீ(Bumble Bee) வவ்வால் ஆகும். இவை மூன்று செ.மீ நீளமும் இரண்டு கிராம் எடையும் உள்ளதாகும். இதுதான் உலகில் உள்ள பாலூட்டிகளில் மிக சிறியதாகும். மேலும் இவைகளின் உணவு முறைகளை வைத்தும் இரண்டு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பழங்கள், பூக்கள் மற்றும் பூக்களின் குளுகோஸ், மகரந்தத் தூள் ஆகியவற்றை உண்டு வாழக்கூடியவை. மற்றது சிறிய பூச்சிகள் வண்டுகள் சிறிய வகை பாலூட்டிகள் சிறிய பறவைகள் ஈக்கள் கொசுக்கள் தவளை மற்றும் மீன்கள் ஆகியவற்றை உண்டு வாழுகின்றன. வவ்வால்களில் மொத்தம் 951 இனங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். அவற்றில் மூன்றே மூன்று வகைகள் உயிர் பிராணிகளின் இரத்தத்தை மட்டுமே குடித்து உயிர் வாழக்கூடியது. உதாரணமாக வம்பயர் வவ்வால்கள் (Vampire) இவைகளின் கூறிய பற்களைக்கொண்டு முதலில் பிராணிகளின் உடலில் காயத்தை ஏற்படுத்துகின்றன. அதிலிருந்து ஒரு முறைக்கு 20 மில்லி வரை இரத்தத்தை குடிக்கின்றன. இந்த அளவு அவற்றின் எடையில் 40 சதவிகிதம் ஆகும். மேலும் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் வோல்ட் வார்ல்ட் புரூட் வவ்வால்கள் (Old world fruit bats) ஒரு நேரத்திற்கு 500 கிராம் வரை பழங்களை உண்ணுகின்றன. இந்த அளவு இவற்றின் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். இதுவே அல்லாஹ்வின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிதான். நம்முடைய பகுத்தறிவுக்கு ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விசயமாக இருப்பினும் கூட அல்லாஹ்வுடைய ஆற்றலை எண்ணி வியப்படையக்கூடிய சம்பவமாகவே இது அமைந்துள்ளது.
தங்குமிடங்கள்
வவ்வால்கள் பொதுவாக ஒரு சமுதாயமாக கூடி வாழுகின்றன. ஒரு கூட்டத்தில் 2000க்கம் மேற்ப்பட்ட வவ்வால்கள் வாழுகின்றன. இவைகள் வருடம் முழுதும் தங்களுக்கு உணவுத்தட்டுபாடின்றி கிடைக்கக்கூடிய இடங்களை தேர்வு செய்து வாழுகின்றன. உலகின் அனைத்து பிரதேசங்களில் காணப்பட்டாலும் கூட மிக அதிக அளவில் வெப்பம் மிகுந்த நாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவைகள் குகைகள் பாறை இடுக்குகள் பொந்துகள் பள்ளங்கள் ஆகியவற்றில் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளுகின்றன. இன்னும் சில வவ்வால்கள் நாம் காணக்கூடிய வகையிலே மரங்களின் கிளைகளிலே தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. இவைகள் தலைக்கீழாக தொங்கக்கூடிய இந்க செயலும் கூட மற்ற எல்லாவற்றிலும் வேறுப்பட்டுள்ள ஒரு நிலைதான். மேலும் தலைக்கீழாக தொங்குவதற்கு எந்தவிதமான சக்தி இழப்பும் இவைகளுக்கு ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும். மனிதர்களைப்பொருத்த வரை இரண்டு நிமிடங்கள் கைகளை ஒரே நிலையில் தூக்கி வைக்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவைகள் தலைகீழாக தொங்கும் போது இவற்றின் உடல் எடையின் காரணமாக பின்புற கால்களின் தசை நார்கள் ஒன்றுடன் ஒன்று தன்னிச்சையாக கோர்த்து இணைந்துக்கொள்வதன் மூலம் இவற்றின் விரல் நகங்கள் தொங்கும் மேற்புறத்தை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுகின்றன. இதனால் எந்த விதமான சிரமமுமின்றி இவை உறக்கத்தில் ஈடுபடுகின்றன.
உலகில் உள்ள
உயிரினங்களில் ஆண் இனத்தின் மார்பில் பால் சுரக்கும் சம்பவம் தயாக் (Dayak) வவ்வால்களில் மட்டுமே காணக்கூடிய
அதிசயம்
நாம் பொதுவாக அறிந்திருப்பது என்னவென்றால் முட்டையிடுதல் கர்பமடைதல் பாலூட்டுதல் போன்ற பண்புகளை பெண் உயிரினங்கள்தான் பெற்றிருக்கின்றன. 1994 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் ஓர் உண்மையினை கண்டறிந்தார்கள். மலேசியாவில் வசிக்கக்கூடிய தயாக் (Dayak) பழந்தின்னி வவ்வால்களில் 10 ஆண் வவ்வால்களை ஆராய்ச்சி செய்து ஓரு அதிசியத்தக்க முடிவினை வெளியிட்டார்கள். நம் கற்பனையிலும் உதிக்காத ஒன்று ஆண் வவ்வால்களின் மார்பகங்களில் பால் சுரந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாலூட்டிகளில் ஆண் உயிரினத்தின் மார்பில் பால் சுரக்கக்கூடியது இது ஒன்றாகத்தான் இருக்கும். இந்த தகவமைப்பு அல்லாஹ்வுடைய அரும்பெரும் ஆற்றலை காட்டக்கூடியதாகவும் நான் அனைத்திற்கும் ஆற்றலுடையவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தக் கூடிய நிகழ்ச்சியாகவே நமக்கு தோன்றுகின்றது.
தூரப்பிரதேசத்தின் தட்பவெப்ப நிலைகளை துல்லியமாக அறிந்து 1600 மைல்களைக் கடந்து செல்லும் அதிசய ஆற்றல்
வவ்வால்கள் சராசரியாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலுடையவை. சில வகை வவ்வால்கள் வருடம் முழுதும் ஒரே மரத்தில் தங்கிவிடுகின்றன. ஆனால் சிலவகை வவ்வால்கள் உதாரணமாக மெக்ஸிகன் பிரிடெய்ல் வவ்வால்கள் குளிர் காலங்களில் தங்கள் இருப்பிடத்தை மாற்றி வெப்பப் பிரதேசங்களுக்கு பெரும் தூரத்திற்க்கு புலம்பெயர்ந்து செல்லுகின்றன. அமெரிக்காவிலிருந்து 1600 மைல்களைக் கடந்து மெக்ஸிகோவை வந்தடைகின்றன. இவைகள் எப்படி இவ்வளவு தூரப்பிரதேசத்தின் கால தட்ப வெப்பநிலையை துல்லியமாக அறிகின்றன என்பதை விஞ்ஞானிகளால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. இவைகளின் மூளைப்பகுதியில் பூமியின் காந்த மண்டலங்களை அறியக்கூடிய அமைப்பு எதுவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அபிப்பிராயப்படுகின்றார்கள். நம்மைப் பொருத்த வரை தேனீக்களுக்கு வஹீ அறிவிக்கக்கூடிய இறைவன் இந்த வவ்வால்களுக்கும் வஹீ அறிவித்துத்தருகின்றான் என்பதில் மிக எளிதாக விடை கிடைத்தவிடுகின்றது.
அடர்ந்த இருளிலும் பார்க்கக்கூடிய கண் அமைப்பு
வவ்வால்கள் பகல் பொழுதை ஒய்விற்கும் இரவு பொழுதை தங்கள் வாழ்க்கைத் தேவைக்கும் பயன்படுத்துகின்றன. இவைகள் அந்திப்பொழுது முதல் வைகறைப்பொழுது வரை மிகச்சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. இரவில் இயங்கக்கூடிய சில உயிரினங்களில் வவ்வாலும் ஒன்றாகும். இரவில் நன்குப்பார்க்கக்கூடிய கண் அமைப்பைப் பெற்றிருக்கின்றன.அடர்ந்த இருளிலும் குறைந்க வெளிச்சத்திலும் நன்கு பார்க்கக்கூடிய கண் அமைப்பினை பெற்றுள்ளன. தூரக்கடல் தீவுகளில் வசிக்கக்கூடிய சில வவ்வால்கள் மாத்திரமே பகல் பொழுதில் தங்கள் இறையைதேடுகின்றன. இவைகளோடு மனிதர்களுக்கு உள்ளத்தொடர்பு இவற்றின் திடீர் குறுக்கீடு காரணமாக மனிதர்கள் சிலசமயம் பயத்திற்கு ஆட்படும் சம்பவம் நடைப்பெறுகின்றன. சராசரியாக வருடத்திற்கு ஒரு மனிதர் வவ்வாலினால் கடிக்கப்பட்டு இறப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இவை நாய் மற்றும் வண்டு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகக்குறைவு.

வம்பயர் வவ்வால் ஒரு
விலங்குனுடைய இரத்தத்தை குடிக்கும் காட்சி
ஒட்டக அதிசயம் Camel’s Wonder !
- அதிசயத்தை
நிகழ்த்திக் காட்டுங்கள் என்று மக்கள் கேட்ட பொழுது,அமைதியாக குர்ஆனை
சுட்டிக்காட்டினார்கள் நபிகள் நாயகம்(ஸல்),நம்பினால் நம்புங்கள்,இது பல
விதங்களில் ஒரு மிகப் பெரும் அற்புதமே,உதாரணத்திற்கு இந்த வசனத்தை
எடுத்துக் கொள்ளுங்கள், ஒன்றாம் வகுப்பு குழந்தைகளை கேட்பது போல்,இறைவன்
இல்லை என்று மறுப்பவர்களை நோக்கி சாதாரணமாக ஒரு கேள்வி கேட்கிறது
(ஒட்டகத்தை பார்க்கவில்லையா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது –
அல்குர்ஆன் 88:17) வாருங்கள் பதிலைப் பார்ப்போம்.
அதற்கு முன்பாக ‘பரிணாம வளர்ச்சி’ என்ற பைத்தியக்கார வாதத்தைப் பற்றி (இந்த வாதத்தை தாங்கிப்பிடிப்பவர்களை தான் அறிவாளிகள் என்று அழைக்கிறது உலகம்) தெரிந்து கொள்வோம். அதாவது மரத்திலிருக்கும் இலையை மேய்வதற்காக தலையை உயர்த்தி முயற்சி செய்த ஒரு ஆட்டின் செயல், அதன் குட்டியின் மீது பிரதிபலிக்க, நீண்ட கழுத்தைக் கொண்ட ஆடு பிறந்தது. பிறகு தலைமுறைகள் மாறி (மாறி,மாறி,மாறி…) நாம் இன்று காணும் ஒட்டகச் சிவிங்கியாக மாறியது. அது போல் தான் மனிதனும் குரங்கிலிருந்து மாறியவன் என்கிறது அந்த வாதம். மற்றவைகளைப் பற்றி ஏதாவது கிறுக்குத்தனமாகவாவது விளக்கம் கொடுக்கும் இந்த வாதம், ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து மாறி தற்போது உள்ள நிலையை அடைந்தது என்பதற்கான சரியான விளக்கத்தை இன்று வரை கொடுக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிறது. ஒவ்வொரு அணுவுக்குப் பின்னாலும் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான். இந்த ஒட்டகம் ஒன்றே போதும் அதை நிரூபிக்க, பாலைவனத்து அரபியர்களால் 160 க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த அதிசயப் பிராணியைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
படைத்தவனைப் பறைசாற்றும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கிக் கொள்கிறது (45 முபுளு எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக,உணவோ,நீரே கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் ‘ஹைட்ரஜனோடு’ அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ‘ஆக்ஸிஜனை’ கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.
உணவு மட்டும் கிடைத்தால் போதும்,நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் ஜீவிக்கும். நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் குடித்து விடும் (Pரஅp).
குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அணுக்களில் ஏற்றிக் கொள்கிறது. அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது. குட்டி போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். மனிதர்களுக்கு உடல் 12மூ நீர் குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும். ஆனால் ஒட்டகம் 40மூ இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும். குட்டிப் போட்டுப் பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழப்பை தாங்கிக் கொள்வதில் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை. நீரிழப்பினால் உடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன்) இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும். அதன் காரணத்தால் வாழ தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு, சூட்டினால் வெடிப்பு மரணம் (நுஒpடழளiஎந ர்நயவ னுநயவா) நிகழ்ந்துவிடும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராது. ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டும் குறையுமே தவிர, அதன் இரத்தத்தில் நீர் அளவு குறையாமல் இருக்கும். நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு நீர் குடித்தால் அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகள் (மனிதன்) நீர் போதை (றுயவநச ஐவெழஒiஉயவழைn) ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து விடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்கு பிறகு 100 லிட்டர் குடிக்கும், ஆனால் சாகாது.
அதன் உடல் சூடு 104 கு டிகிரியை அடைய வேண்டும். அப்பொழுதுதான் அதற்கு வியர்வையே வரும். அது வரை வியர்க்காது. (மனிதர்களுக்கு 98 கு டிகிரி -க்கு மேலே போனால் ஜூரம் என்று பெயர்) அதன் உடல் அளவிற்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்க வேண்டும், ஆனால் மிகவும் குறைவாக இருப்பது ஒரு விசேஷம். மற்ற பிராணிகள் (மனிதன் உட்பட) உடல் சூட்டை வியர்த்து குளிர்வித்துக் கொள்ளும். ஆனால் ஒட்டகம் மட்டும் பகல் காலங்களில் அடிக்கும் வெயிலின் வெப்பத்தை 12 கு டிகிரி வரை சேர்த்து வைத்துக் கொண்டு (மனிதர்களுக்கு ஒரு சில டிகிரி அதிகரிப்பது நோயின் அறிகுறி) இரவின் குளிரான காற்றை பயன்படுத்தி வியர்க்காமல் (வியர்ப்பது நீருக்கு நஷ்டம்) சூட்டை வெளியாக்கி விடுகிறது.
ஒட்டகத்திற்கு இருப்பது போல சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது. நம்முடைய சிறுநீரில் அதிக பட்சமாக தாது கழிவுகள் 8 சதமும், 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறுநீரில் 40 சதத்திற்கு அதிகமாக கழிவும், குறைவான நீரும் இருக்கும். அந்த அளவிற்கு குறைந்த நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. (நம்முடையதாக இருந்தால் கல் அடைப்பு ஏற்பட்டு வேலையை நிறுத்தி இருக்கும்) மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம். அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சத்து குறைய ஆரம்பத்தால், சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை (ஆiஉசழடியைட ளுலவொநளளை) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதன் சிறுநீரகம்.
மற்ற பிராணிகளின் (மனிதன் உள்பட) மலம் காய்வதற்கே இரண்டு நாட்கள் தேவைப்படும். ஒட்டகத்தின் மலத்தை போட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்ற வைத்துவிடலாம் என்கிறார் மிருக ஆராய்ச்சியாளர் டேவிட் ஆட்டன்பரோ, அந்த அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.
நம்முடையை மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால் மற்ற எதற்கும் இல்லாத விசேஷ மூக்கு அமைப்புதான் காரணம். அதன் மூக்கிற்குள் அமைந்திருக்கும் அடுக்கடுக்கான திசு அமைப்புகள் அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தின் மூன்றில் இரண்டு பகுதியை வெளியேற்ற விடாமல் தடுத்து விடுகிறது. மேலும் அதன் மூக்கிலிருந்து வழியும் சளியைக் கூட அதன் மூக்கின் அமைப்பு உதட்டின் மேல் வெடிப்பின் வழியாக மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிடுகிறது. பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை மோப்ப சக்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு.
கடுமையான வெப்ப காலங்களில் உண்பதை குறைத்துக் கொண்டு உடம்பை இதமாக வைத்துக் கொள்கிறது. நிழல் கிடைத்தால் உடனே பயன்படுத்திக் கொள்ளும். நிழல் இல்லையென்றால் சூரியனை நோக்கி உடம்பை வைத்துக் கொள்ளும். ஏனென்றால் குறைவான வெயில் மட்டும் அதன் உடம்பில் படும்படியாக அதன் உடம்பே அதற்கு நிழலை ஏற்படுத்திவிடுகிறது. அதற்கு காரணம் நீண்ட முட்டை வடிவமான அதன் உடல் அமைப்பு ஆகும்.
ஒட்டகங்கள் கூட்டங்கூட்டங்களாக பிரிந்துக் கொண்டு நெருங்கிக் கொள்ளும். ஏனெனில் உடல் சூட்டை சுற்றுப்புற காற்றின் சூட்டைவிட குறைவாக வைத்துக் கொள்வதற்காக, அதன் உடலில் படர்ந்தது போல உள் உரோமங்கள் உடல் சூட்டை வியர்வையின் உதவியில்லாமல் வெளியேற உதவுவதோடு வெளிசூட்டையும், வெயிலின் தாக்கத்தையும் உடம்பிற்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது. அதன் நீண்ட உயரமான கால்கள் அதன் உடலை உயரே வைத்துக் கொள்கிறது. ஏனென்றால் பாலைவனத்தின் மணல் பரப்புகளின் மேல் சூடு அதிகமாக படர்ந்திருக்கும்.
இப்படியாக, சுவாசம், சிறுநீர், வியர்வை, எச்சில் என்று எதன் மூலமாகவும் ஒரு துளி நீரைக் கூட வீணாக்கி விடாமல் ஜாக்கிரதையாக இருக்கிறது ஒட்டகம் (நீர் கஞ்சன்). சரி, நீரை பார்த்தோம் மணலுக்கு போவோம் வாருங்கள்.
மற்ற மிருகங்கள் குழம்புகளை கொண்டு நடக்கும், ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது. (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் ளுழெற ளூழநள ஆகும்) அதன் இரு குழம்புகளும் விரித்து கொள்ளும் காரணத்தால் 680 முபள வரை எடையுள்ள ஒட்டகம்,450 முபள வரை சுமையை சுமந்துக் கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் ஓட முடிகிறது (நாம் ஒரு சில அடிகள் நடந்தால் நாக்கு தள்ளிவிடும்) குட்டி போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (யுமெடந துழiவெ) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்லமுடிகின்றது.
மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு. அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.
அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கிவிடாமல் தடுத்து விடுகிறது (ளுரn ஊடயளள). கண்ணிற்கு கீழே உள்ள இமைப் போன்ற அமைப்பு, கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாலை சூரியனின் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை. அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம். பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.
எங்கேயாவது தூரத்தில் உணவோ,நீரோ கிடைக்கும் பாலைவெளியில்,அதை சிரமமில்லாமல் தேடுவதற்கு அதனுடைய நீண்ட கழுத்து உதவுகிறது. (12 அடி உயரத்தில் தலை இருக்கும்).
நான் பசுமாடு. புல்லும்,புண்ணாக்கும் கொடுத்தால்தான் பால் தருவேன் என்ற கர்வம் ஒட்டகத்திடம் கிடையாது. கிடைத்ததை தின்றுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது. அதுவும் அபரிதமான அளவு வைட்டமின் ‘சி’யுடன்.
மற்ற மிருகங்கள் மேயும் பொழுது தாவரங்களில் உள்ள ஈரம் தரையில் சிதறும். அதைக்கூட வீணாக்கிவிடாமல் மேயும் தன்மை கொண்டது ஒட்டகம். பாலைவனத்தில் அதிகமான முட்செடி தான் கிடைக்கும். அதை மேய்வதற்கான அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம். எந்த அளவிற்கு என்றால் அதன் உதட்டில் பட்டு முட்களே உடைந்துவிடும். மேலும் விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது.
சராசரியாக 86 வயதைக் கொண்ட ஒட்டகம், நான் புலி, பசித்தாலும் புல்லைத் தின்ன மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்காது. உணவு பஞ்சம் என்றால் எலும்பு, மீன், இறைச்சி, தோல் சில சமயங்களில் முதலாளியின் கூடாரத்தையே தின்றுவிடும்.
வியர்வை ஆகட்டும், எச்சில் ஆகட்டும் 99 சதம் நீர் இருக்கும். கழிவுகளும் அபரிதமான நீரை கொண்டதாகத்தான் இருக்கும். சுவாசத்திலும் நீர் வெளியாகிறது. இது ஒட்டகத்திற்கு எப்படி தெரிந்தது? இந்த அளவிற்கு அறிவுப்பூர்வமாக தன் உடலை அமைத்துக் கொள்ள தெரிந்த ஒட்டகத்திற்கு அறிவிருந்தால் எங்கேயாவது நீரும், உணவும் தாராளமாகக் கிடைக்கும் இடத்தை நோக்கி ஓடியிருக்கலாம். (மணிக்கு 5 கி.மீ வேகத்தில் ஒரு நாளைக்கு 40 கி.மீ பிரயாணம் செய்யும்) முட்டாள் ஒட்டகம் பாலைவனத்தில் இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய தேவையிருந்து இருக்காது. சரி பாலைவன சூழ்நிலைக்கு ஏற்ப ஒட்டகம் தானாக பரிணாம வளர்ச்சி அடைந்தது என்றே வைத்துக் கொள்வோம். அதன் படி பாலைவனத்தில் வசிக்கும் மனிதன் இது வரை பாதி ஒட்டகத் தன்மைக்கு மாறியிருக்க வேண்டுமே?
படைப்பாளன் உண்டா? அல்லது பரிணாம வளர்ச்சியா?என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சரி இந்த கிறுக்குத்தனமான வாதத்தை இத்துடன் விட்டுவிடுவோம். நம்முடைய அலட்சியத்தை கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்.
மறுமையில் ஒரு நாள் ஆயிரம் வருடங்களுக்கு சமமானது என்கிறது குர்ஆன். அதன் படி பார்த்தால் சராசரியாக 60 வயது வாழ்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதில் பாதியை தூக்கத்தில் கழித்து விடுகிறோம். ஆக மறுமை நாள் கணக்குபடி நம்முடைய இந்த உலக வாழ்க்கை ஒரு சில மணி நேரம் தான் ஆகிறது. இந்த அற்பமான சில மணி நேர வாழ்க்கைக்காக உன்னதமான மறுமையை விட்டுவிடுகிறோம். உன்னதமான குர்ஆனையும்,உயர்வான நபி வழியையும் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டு மனம் போன போக்கில் வாழ்கின்றோம். அதன்படி நடக்கவோ, அதன் உன்னத கருத்துக்களை உலகிற்கு எடுத்துச் சொல்லவோ, அப்படிச் சொல்பவர்களுக்கு உதவவோ (நாயிடம் கிடைத்த தேங்காய்) தவறியதால் ஏற்படும் விளைவுகளை முஸ்லிம்களாகிய நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
மேலும் மறுமையில் இதைவிட கொடிய தண்டனை வேறு இருக்கிறது. ஏனென்றால் குர்ஆன் பொய் சொல்லாது. அதன் வார்த்தை பொய்யானதாக சரித்திரம் இல்லை. இல்லாத ஒன்றைப் பற்றி பேசாது.
எனது அருமை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! குர்ஆன் நம்மை பெருமையாக பேசுகிறது. அதாவது நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக ஆகுவதர்க்காகவும் நம் தூதர் உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நடுநிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம் (2:143) என்கிறது. படைத்தவனுக்கு உண்மையாளர்களாக இருக்கிறோமா என்பதை நீங்களே உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள். குர்ஆனை கிளிப் பிள்ளை போல் ஓத மட்டும் செய்யாதீர்கள். ஒரு நாளைக்கு ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்ளுங்கள். அது சம்பந்தமாக சிந்தியுங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்கள். இதன் அற்புத கருத்துக்களை அறிவுப்பூர்வமான முறையில் உலகிற்கு எத்தி வைக்க முயற்சி செய்யுங்கள். நிறைய புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். புத்தகங்களை எழுதவும்,படிக்கவும் முயற்சி செய்யுங்கள். - ஆதார நூல்கள்:
- 1)
Quran 88: 17, 2: 143
2) The Deserts – A. Starker Leopold – Page 98 – 99
3) Desert – Susan Arritt Page – 125
4) The Desert Realm, National Geography Society – Page – 289
5) Deserts a Miracle of Life – Jim Flegg, Page 62
6) The Guiness Encyclopedia, Page 159
7) The World Book Encyclopedia Ref: Camel
8) Encyclopedia Americana , Vol -5 Page 262
9) Chambers Encyclopedia, Vol 2 Page 795
10) Camel – Caroline Amold, Page 30 / 34
11) Mammals of the southern Gulf – Christangross – Page 11
12) Amazing Animals – The life Book, Page 22
13) Life Sense – John Downer – BBC- Page 100 – 103
14) Anantha Vikadan, Matham 28 / 03 / 99 – Page 122
15) Muthaaram – 21 / 01/00 Page 15 / 23
மனித மூளை Human Brain
மூளை பற்றி திருக்குர்ஆன்
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழுது கொண்டிருந்த போது அவரைத் தடுத்த கொடிய நிராகரிப்பவர்களில் ஒருவரைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:-அப்படியல்ல! அவன் விலகிக் கொள்ளவில்லையானால் நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றியைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றியை. (திருக்குர்ஆன் 96:15-16).
முன்னெற்றியை திருக்குர்ஆன் ஏன் தவறிழைத்து பொய்யுரைக்கும்| என்று கூறுகின்றது? அந்த மனிதர் தவறிழைத்து பொய்யுரைப்பவர் என்று திருக்குர்ஆன் ஏன் கூறிடவில்லை? தவறிழைத்து பொய்யுரைப்பதற்கும் முன் நெற்றிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
தலையின் முன்பாகத்தில் மண்டையோட்டிற்குள் நாம் பார்வையைச் செலுத்தினால் செரப்ரத்தின் முன் பாகத்தை நாம் காணலாம். இந்த பாகத்தின் செயல்பாடு பற்றி பிஸியாலஜி என்ன கூறுகின்றது? உடல் இயங்கியல் மற்றும் பிஸியாலஜி ஆகியவற்றின் அடிப்படைகள் என்ற புத்தகம் இந்த பாகத்தைப் பற்றி கூறுகின்றது: செயல்பாடுகளை திட்டமிடவும் தொடங்கவும் தேவையான தூர நோக்குப்பார்வை மற்றும் அதற்கான உந்துதல் முன்பக்;கமுள்ள மூளையின் பின்பாகத்தில் ஏற்படுகின்றது அதாவது நெற்றிப்பகுதி (படம் 9.1 காண்க). இதுதான் அஸோஸியேஸன் கோர்டக்ஸின் பகுதியாகும். அந்த புத்தகம் மேலும் கூறுவதாவது: முன்நெற்றிப்பகுதி தூண்டும் பகுதியாக இருப்பதால் அத்துமீறும் செயல்பாடுகளின் மையத்தளமாகவும் அதுதான் விளங்குகின்றது …
ஆகவே செரப்ரத்தின் இந்தப் பகுதிதான் திட்டமிடவும் தூண்டவும் நல்ல அல்லது கெட்ட செயல்களை தொடங்கவும் காரணமாக உள்ளது. அதுதான்; பொய் சொல்லவும் உண்மையை கூறவும்; காரணமாக உள்ளது. ஆகவே எவராவது ஒருவர் பொய்யுரைக்கும் போதோ அல்லது பாவம் செய்யும் போது திருக்குர்ஆன்; கூறியது போன்று அவரின் முன்நெற்றி தவறிழைத்து பொய்யுரைக்கின்றது என்று சொல்வது பொருத்தமானதாகும். தவறிழைத்து பொய்யுரைக்கும் நாஸியா (முன்நெற்றி)! கடந்த அறுபது வருடங்களுக்கு முன்புதான் அறிவியலாளர்கள் முன்நெற்றியின் இந்த செயல்பாடுகளை கண்டுபிடித்தனர் என்று பேராசிரியர் மூர் அவர்கள் கூறுகின்றார்கள்
வியக்கத்தகு உண்மைகள்-1
24 மணி நேரத்தில் சராசரி மனிதனின்:
1) இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.
2) நுரையீரல் 23.045 முறை
சுவாசிக்கிறது.
3) இரத்தம் 16,80,000 மைல்கள் பாய்கிறது.
4)
நகங்கள் 0,00007 அங்குலம் வளர்கின்றன
5) முடி 0,01715 அங்குலம்
வளருகிறது
6) 2.9 பவுண்டுகள் நீரை (அனைத்து திரவ உட்பட) அருந்துகிறது
7) 3.25 பவுண்டுகள் உணவு உட்கொள்கிறது.
8) 438 கன அடி காற்றை
சுவாசிக்கிறது.
9) 85.60, உடல் வெப்பத்தை இழக்கிறது.
10) 1.43
pints வியர்வையை உற்பத்தி செய்கிறது.
11) 4,800 வார்த்தைகளை
பேசுகிறது.
12) தூக்கத்தின் போது 25.4 முறை அசைகிறது.
வியக்கத்தகு உண்மைகள்-2
- உங்களுக்கு தாகம் எடுக்கவில்லையானால் நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால், ஏதோ ஒரு காரணத்தால் நம் உடலில் உள்ள நீர் சத்து முற்றிலும் தீர்ந்து விடுமானால் தாகம் எடுக்கும் செயல்பாடு நிறுத்தப்பட்டுவிடுகிறது (the thirst mechanism shuts off).
- சுவிங்கத்தை மென்று கொண்டே வெங்காயத்தை உரித்தால், கண்ணில் நீர் வராது.
- உங்கள் நாக்கு இளஞ்சிவப்பு (pink)நிறத்தில் இருந்தால் மட்டுமே உங்கள் நாக்கில் கிருமிகள் இல்லையென்று பொருள் அன்றி வெண்மையாக இருப்பின் வெண்படலமாக பாக்டீரியா படர்ந்து இருக்கிறது என்று பொருள்.
- SOS என்ற வானொலி அலை முதல் முதலாக டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டது
- ஆச்சர்யமான விஷயங்களை பார்க்கும் போது மனிதனுடைய கண்கள் 45 சதவீதம் வரை விரிவடைகின்றன.
- குகையை விட்டு வெளியேறும் வவ்வால்கள் எப்பொழுதும் இடது பக்கமாகவே திரும்புகின்றன.
- தேன் மிக எளிதாக ஜீரனிக்க காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுள்ளது.
- சேவல்களால் அதண் கழுத்தை உயர்த்தாமல் கூவ முடியாது.
- நாம் தும்மும் ஒவ்வொரு தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சில இறக்கின்றன.
- இருதயத்துக்கு இடமளிப்பதற்க்காக உங்களது இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலை விட சிறியதாக இருக்கும்.
மின்சாரம் என்றால் என்ன ?
மின்சாரமில்லாத ஒரு வாழ்க்கையை எண்ணிப்பார்க்க இயலுமா நம்மால் ?! அப்படி நம் வாழ்க்கையோடு ஒன்றினைந்து விட்ட மின்சாரத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?
மின்னணுக்களின் ஓட்டத்தினால் மின்சாரம் (electricity) உருவாகிறது. அல்லது மின்னணு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைகின்றோம். உதாரணமாக மின்னணுக்களின் ஓட்டமே (மின்சாரமே)மின்னலுக்கு காரணமாகும். மின்சாரம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருள் மின்காந்த சக்தியை பெறுகிறது.
மின்சாரம் என்பது நம்மை சூழ்ந்துள்ள இயல்பாக ஏற்படும் ஒரு ஆற்றலாகும். மனிதர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இதைப்பற்றி அறிந்திருந்தனர்.
பண்டைய மனிதர்கள் அதை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் அதை ஒரு மாயாஜாலாமாக கருதியிருந்தனர். அம்பர் எனப்படும் ஒருவகை பிசினை ஒரு துணியில் தேய்த்து அதை வைக்கோல் துண்டுகள் அருகில் கொண்டு சென்றால் அவற்றை ஈர்ப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவர்கள் நிலை மின்சாரம் மற்றும் மின்னல் போன்றவற்றில் ஏற்பட்ட மின்சாரத்தின் விளைவுகளை சுமார் 2500 வருடங்களுக்கு முன்னரே பதிவு செய்து வைத்துள்ளனர்.
கி.பி. 1600 –ல் தான் முதன் முதலாக டாக்டர் வில்லியம் கில்பர்ட் என்பவர் ’குறிப்பிட்ட ஒரு சில பொருட்களை அம்பரின் மீது உரசினால் அது நிலைமின்னூட்டம் பெறுகிறது என்பதை குறிப்பிட ”எலெக்ட்ரிகா” “electrica,” என்ற வார்த்தையை உருவாக்கினார். இந்த வார்த்தையே பின்பு மின்சாரம் “electricity” என்ற வார்த்தை உருவாக காரணியாக அமைந்திருக்கலாம்.
மின்சாரமும், காந்த சக்தியும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்தவை. காந்த சக்தியை பற்றி விரிவாக தனி பாடத்தில் காண்போம். மின்சாரத்தைப்பற்றி புரிந்து கொள்ள இன்னொரு முக்கியமான இப்பிரபஞ்சத்தின் அடிப்படை பொருளாகிய மிகச்சிறிய பொருள் ஒன்றைப்பற்றி தெரிந்து கொண்டாக வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)