சின்ன உதாரணம் மூலம் பார்க்கலாம். இன்றைய நவீன
குழல் விளக்குகள் தொடர்ந்து பிரகாசிப்பதில்லை. அவை விட்டு விட்டு ஒரு
நொடிக்கு 50 தடவை வீதம் பிரகாசிக்கின்றன. ஆனாலும், நமது கண்களின் பார்வை
நிலைப்புத் தன்மையால் நமது பார்க்கும் உருவத்தின் பிம்பம் நமது பார்வையில்
பத்தில் ஒரு பங்கு விநாடி வரையில் தங்கும் காரணத்தினால் நாம் தொடர்ந்து
பார்க்க முடிகிறது. இந்த இயல்பைத்தான் காற்றாடியின் இறகுகள்
உணர்த்துகின்றன. காற்றாடியின் இறகுகள் பூரணச் சுற்றுகள் பிரதிபலிப்பதில்
அடர்வு எண்ணுடன் ஒத்துப் போகுமேயானால் இறகுகளை அத்துடன் ஒன்றிய நிலையில்
பார்க்கிறோம். அறிவியல் அறிஞர்கள் இந்த நிலையை ‘ஸ்ட்ரோயோஸ்கோபிக் தன்மை’
என்று கூறுவர். ஆனால், எப்பொழுது இந்தச் சமநிலை மாறுபடுகிறதோ
அப்பொழுதெல்லாம் மின் விசிறியின் இறகுகள் முன்புறமோ அல்லது பின்புறமோ
சுழல்வது போன்று தெரியும்.
No comments:
Post a Comment