dvdfv

Sunday, December 30, 2012

சிந்திக்க வைத்த 'அன்பே சிவம்'


கடவுள் எல்லோருக்கும் பொதுதான். அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் ஒன்று எனக்கு மிகவும் பிடிக்கும். "காசு கொடுப்பதால் ஒருவனுக்கு ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொடுத்தால் அவர் கடவுள் அல்ல. கூலி.". எல்லாம் நம் மனதில் தான் இருக்கிறது. நாம் நல்லது செய்தால் கடவுள் நமக்கும் நல்லது செய்வார் என்று எண்ணுவதே சரி. அதை விடுத்து உண்டியலில் பணம் போடுவதும், குடம் குடமாகப் பாலாபிசேகம் செய்தாலும் அதில் நமது சுயநலமே ஒளிந்திருக்கிறது என்பது அந்தக் கடவுளுக்குத் தெரியாதா என்ன?

சரி அப்போ கடவுள் இல்லையா? இப்படியெல்லாம் திடீர்னு கேட்டா எப்படி? குழந்தையாயிருக்கும் போதே கடவுள் நம்பிக்கையை சொல்லியிருக்கிறார்கள் வீட்டில். எனவே அந்த நம்பிக்கையையும் விடமுடியாது. பகுத்தறிந்து பார்த்தால் கடவுள் எல்லாம் கிடையாது என்றே ஒருபுறம் தோன்றுகிறது. அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் சிறு வயதில் ஏற்பட்ட கடவுள் நம்பிக்கை.

சிறுவயதில் ஏற்பட்ட நம்பிக்கையை ஆராய்ந்தால் அதில் பல ஓட்டைகள். வாராவாரம் கோவிலுக்குப் போ, விளக்கேற்றி வழிபடு எதாவது தோஷம் இருந்தால் பரிகாரம் செய் என்றெல்லாம். நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பகுத்தறிவினால் கடவுளை ஆராயும் போது ஒரு கடவுள் எல்லா மக்களையும் சமமாக அல்லவா நினைக்க வேண்டும்? அவர் எதற்கு சிலருக்கு மட்டும் துன்பங்களைத் தருகிறார்? வெள்ளிக்கிழமை எலுமிச்சையில் விளக்கேற்றினால் துன்பங்களை நீக்குவார் என்பதெல்லாம் சும்மா (எலுமிச்சையில் விளக்கேற்றினால் கடவுளுக்கு என்ன கிடைக்கப்போகிறது? அவர் என்ன அவ்வளவு அல்பமா?) என்றெல்லாம் தோன்றுகிறது.

எனவே கடவுள் நம்பிக்கையையும் விடமுடியாமல் பகுத்தறிவையும் விடமுடியாமல் கடவுளுக்குப் புதிய அர்த்தம் கொடுக்கிறோம். அதுதான் "கடவுள் எல்லோரையும் சமமாக நினைக்கிறார். அவருக்கு இந்த சடங்குகள் எல்லாம் தேவையில்லை. நமக்கு நாம் நல்லவனாக இருந்தால் - மனசாட்சிக்கு விரோதமின்றி - கடவுளே நம்மை ஏற்றுக்கொள்வார்" என்று கடவுள் நம்பிக்கையையும், பகுத்தறிவையும் சேர்த்து ஒரு புதிய விளக்கம் தரவேண்டியிருக்கிறது.

நானும் கடவுள் நம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகும் ஒருவன்தான்.

11 comments:

Veerasundar said...
கடவுள் என்பது வெறும் நம்பிக்கை. மனோதத்துவ ரீதியில் பார்த்தால், மக்கள் தங்கள் துன்பங்களை பகிர்ந்து கொள்ள ஏற்படுத்திக் கொண்ட ஒரு முறைதான் 'கடவுள்' - கடவுளை இன்றிருக்கிற அளவுக்கு வணிக மயமாக்கியது மதவியாபாரிகள்.
Anonymous said...
Both religion and god are the inventions of man. They both evolved as human intellect kept growing. But today with the help of Science we have advanced to a stage that we no more can accept those antiquated and unverifiable dogmas (கட்டுக்கதைகள்)of our forefathers. We can easily and logically disprove the existence of the god given to us by our ancestors and then enforced by the religions, but there is not an iota of evidence that can prove the existence of such god or deity.
கடவுள் ஒரு கற்பனை என்பதை தர்க்க ரீதியாக நிரூபணம் செய்ய முடியும். அதே நேரத்தில் கடவுள் (personal god) இருப்பதாக நிரூபணம் செய்வது கடுகளவும் சாத்தியமில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான மனம். பெற்றவர்களாலும்,அவர்கள் சார்ந்த மதங்களாலும் நமது மூளையில் ஏற்றப்பட்ட விஷயங்களை பலரால் எளிதில் கைவிட முடிவதில்லை.நம்மில் பலருக்கு பகுத்தறியும் ஆற்றல் கைவருவதில்லை. ஆனால் உங்களுக்கு Faith எனும் மனத்தடையிலிருந்து நீங்கி Enlightenment எனும் உயர்நிலையை அடையும் பக்குவம் கைகூடும் சாத்தியம் தெரிகிறது. congratulations!
www.godisimaginary.com என்ற வெப் சைட் சென்று பாருங்கள். cosmos,universe மற்றும் evolution பற்றி யெல்லாம் படிக்க படிக்க நல்ல தெளிவு வரும். Richard Dawkins, Stephen Hawkings, Carl Sagan போன்ற விஞ்ஞானிகள் எழுதிய புத்தகங்களை படியுங்கள்.
மகா மேதை Einstien ம் personal god ஐ ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கடவுளை பற்றியும் அதை போதிக்கும் மதங்களை பற்றியும் தெளிவு அனைவருக்கும் வந்தால் இங்கு அன்றாடம் நடக்கும் மதச் சண்டைகளும், 'என் கடவுள்தான் பெரியவர்' என்று சொல்லிக் கொண்டு உலக அமைதியை பலி கொள்ளும் தீவிரவாதமும் நடை பெறாது. எனவே அனைவரும் தெளிவு பெற விரும்புவோம். மனிதம் நிலை பெற நம்மால் இயன்றதைச் செய்வோம். கோடானு கோடி ஆண்டுகளாய் பரிணமித்து, வளர்ச்சியுற்று நமக்குக் கிடைத்திருக்கும் பெருமை மிக்க இந்த அரிய உலக வாழ்க்கையை இனிமையாய் வாழக் கற்றுக் கொள்ளுவோம்.

Wednesday, December 26, 2012

உண்மைகள் சில

பெற்ற தாய்தந்தை  வணங்கினால் உன் எண்ணம்போல்  உயர்வாய் ..

வாழ்கை இனிமையானது

பாரதியின் புதிய ஆத்திச்சூடி:

Thursday, May 31, 2012







அச்சம் தவிர்


ஆண்மை தவறேல்.

இளைத்தல் இகழ்ச்சி

ஈகை திறன்

உடலினை உறுதிசெய்

ஊண்மிக விரும்பு

எண்ணுவது உயர்வு

ஏறுபோல் நட

ஐம்பொறி ஆட்சிக்கொள்

ஒற்றுமை வலிமையாம்.

ஓய்தல் ஒழி.

ஓளடதம் குறை.

கற்றது ஒழுகு.

காலம் அழியேல்.

கிளைபல தாங்கேல்.

கீழோர்க்கு அஞ்சேல்.

குன்றென நிமர்ந்து நில்.

கூடித் தொழில் செய்.

கெடுப்பது சோர்வு

கேட்டிலும் துணிந்து நில்.

கைத்தொழில் போற்று

கொடுமையை எதிர்த்து நில்.

கோல்கைக் கொண்டுவாழ்

கவ்வியதை விடேல்.

சரித்திரச் தேர்ச்சி கொள்

சாவதற்கு அஞ்சேல்

சிதையா நெஞ்சு கொள்.

சீறுவோர்ச் சீறு.

சுமையினுக்கு இளைத்திடேல்.

சூரரைப் போற்று

செய்வது துணிந்து செய்

சேர்க்கை அழியேல்.

சைகையில் பொருளுணர்.

சொல்வது தெளிந்து சொல்

சோதிடந் தளை யிகழ்.

சௌரியம் தவறேல்.

ஞமலிபோல் வாழேல்.

ஞாயிறு போற்று

ஞிமறென இன்புறு.

ஞெகிழ்வது அருளின்.

ஞேயம் காத்தல்செய்.

தன்மை இழவேல்.

தாழ்ந்து நடவேல்.

திருவினை வென்று வாழ்.

தீயோர்க்கு அஞ்சேல்.

துன்பம் மறந்திடு

தூற்றுதல் ஒழி.

தெய்வம் நீ என் றுணர்.

தேசத்தைக் காத்தல் செய்.

தையலை உணர்வு செய்.

தொன்மைக்கு அஞ்சேல்.

தோல்வியில் கலங்கேல்.

தவத்தினை நிதம் புரி.

நன்று கருது.

நாளெலாம் வினை செய்;

நினைப்பது முடியும்

நீதிநூல் பயில்.

நுனியளவு செல்.

நூலினைப் பகுத்துணர்.

நெற்றி சுருக்கிடேல்.

நேர்படப் பேசு.

நையப் புடை.

நொந்தது சாகும்.

நோற்பது கைவிடேல்.

பணத்தினைப் பெருக்கு.

பாட்டினில் அன்பு செய்.

பிணத்தினைப் போற்றேல்.

பீழைக்கு இடங்கொடேல்.

புதியன விரும்பு.

பூமி இழந்திடேல்.

பெரிதினும் பெரிது கேள்.

பேய்களுக்கு அஞ்சேல்.

கொய்மை இகழ்.

போர்த் தொழில் பழகு.

மந்திரம் வலிமை.

மானம் போற்று.

மிடிமையில் அழிந்திடேல்.

மீளுமாறு உணர்ந்துகொள்.

முனையிலே முகத்து நில்.

மூப்பினுக்கு இடங் கொடேல்.

மெல்லத் தெரிந்து சொல்.

மேழி போற்று.

மொய்ம்புறத் தவஞ் செய்.

மோனம் போற்று.

மௌட்டியந் தனைக் கொல்.

யவனர்போல் முயற்சிகொள்.

யாரையும் மதித்து வாழ்.

யௌவனம் காத்தல் செய்.

ரஸத்திலே தேர்ச்சிகொள்.

ராஜஸம் பயில்.

ரீதி தவறேல்.

ருசிபல வென்றுணர்.

ரூபம் செம்மை செய்.

ரேகையில் கனி கொல்.

ரோதனம் தவிர்.

ரௌத்திரம் பழகு.

லவம் பல வெள்ளமாம்.

லாகவம் பியற்சி செய்.

லீலை இவ் வுலகு.

(உ)லோக நூல் கற்றுணர்.

லௌகிகம் ஆற்று.

வருவதை மகிழ்ந்துண்.

வான நூற் பயிற்சி கொள்.

விதையினைத் தெரிந்திடு.

வீரியம் பெருக்கு

வெடிப்புறப் பேசு.

வேதம் புதுமை செய்.

வையத் தலைமை கொள்.

வௌவுதல் நீக்கு.

 
எழுதியவர் : பாரதியார்
 
 
 
 
- என்றும் அன்புடன்..

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;பாலாஜி ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

 

கல்லூரி வாழ்க்கை…

வாழ்வின் வசந்தகாலம்,
முதல்நாள் அறிமுகம்,
இடம் அறியா நூலகம்,
உணவுகளை மட்டுமல்லாது உணர்வுகளை உடன் பகிரும்  உணவகம்…

தொட்டாச்சினுங்கி சண்டைகள்,
தொல்லை தரும் தேர்வுகள்,
தோள் சாயத் தோழர்கள்,
நட்பின் அர்த்தம்  உணர்த்தும் நாட்கள்…

பிறந்தநாள் கொண்டாட்டம்,
பழிவாங்கும் பட்டாளம்,
பிறந்தவன் திண்டாட்டம்,
மற்றவர்க்கோ ஆட்டம் பாட்டம்…

தொடரும் என் கல்லூரி நாட்கள்,
கசக்கி எறிய காகிதம் அல்ல காலம் கடந்து சொல்லும் கல்வெட்டு…



BALAJI.

மீண்டும் வருமா கல்லூரி வாழ்க்கை...

"விலகி சென்ற காதலும் - நாம்
வீண் செய்த நேரமும்

கேட்டுக்கொண்ட மன்னிப்பும் - நாம்
கேள்வி பட்ட நற்செய்தியும்

சேர்ந்து படித்த நேரமும் - நம்மால்
சோர்ந்து போன ஆசிரியரும்

தேராமல் போன பரிட்சையும் - நாம்
தோற்றுப் போன நேர்முக தேர்வும்

வாங்கி பருகிய தேநீரும் - நம்
வழக்கமான புகை போதையும்

நாட்களுடன் ஏற்பட்ட அனுபவமும் - நம்
நட்புடன் ஏங்கி தவித்த நாட்களும்

கற்றுக்கொண்ட பாடங்களும் - கல்லூரில்
கடந்து வந்த காலங்களும் -

என்றும் மலரும் நினைவுகள் - மீண்டும் வருமா"


எங்களை பற்றி

பல நேரங்களில் நம் கண் முன்னே செல்லும் காட்சிகள் நம் அகக் கண்முன்னே தெரிவதில்லை.
opening-picture
அதே போல் சில நேரங்களில் நாம் கண்ட ஒரு காட்சி - ஒரு சம்பவம் - ஒரு உணர்வு - ஒரு மனிதர் - ஒரு நூல் …. நமது ஒவ்வொரு உணர்வையும் தட்டி எழுப்பி,வாழ்வின் ஜீவ நாடியை உலுக்கும்.
அதன் பின்னர் நம் வாழ்கை திசை திரும்பும். அவ்வாறு திரும்பிய எங்கள் வாழ்வின் விளைவே இந்த தளம். எங்களை கரை சேர்த்த கலங்கரை விளக்கம் அமரர் கல்கி ,அவரது காவியங்கள். ஏதோ விட்ட குறை தொட்ட குறை என்று உறங்கிக் கொண்டிருந்த எங்கள் உள் உணர்வை உயிர்ப்பித்து,ஒரு மகத்தான வரலாற்றை , அரிய கலைப் பெட்டகத்தை பொன் ஏட்டில் பதிக்கவேண்டிய ஒரு கலையை வீணடிக்கும் அவலத்தை உணர்த்தியது. அதன் விளைவே இந்த தளம்..
சிற்ப கலை - கருங்கல்லில் காவியங்கள் என்று தொன்று தொட்டு திகழும் இந்த அறிய செல்வங்கள் இப்போது அழிந்து வருகின்றன.
எதனால் ?
ஆயிரம் ஆண்டு நின்று சிரித்த இந்த கல் ஓவியங்களை ரசிக்க இப்போது ஆள் இல்லை. ரசிக்க தெரிந்தால் இவற்றை சிதைய விடுவோமா ? அரசனும் ஆண்டியும் போற்றி வளர்த்த கலை….சிற்பம் நாட்டியம் வாய்பாட்டு ஆன்மீகம் என்று ஒரு சமுதாயத்தை தாங்கி குடை பிடித்த மண்டபங்கள் இப்போது தங்கள் தூண்களே சிதைந்து ஆட்டு புழுக்கையும் , வெளவால்கள் குழுமும் அவலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர் …இன்று விழிப்புணர்வு இல்லாமையால் அரசின் கண்ணில் இருந்து விலகி நலிந்து மடியும் தருவாயில் உள்ளது இந்த கலை மட்டும் அல்ல அந்த கலை சின்னங்களும் தான்.
ஆடைகளை களைவது போல் இவை ரசிகர் மனதில் இருந்து பிரிந்தது எதனால்? எங்கோ அமெரிக்கா ஜப்பான் என்று உலகெங்கிலும் இருந்து ரசிகர்களை தன் வாசம் ஈர்க்கும் இவை என் நமது கவனத்தை ஈர்க்கவில்லை. கண்ணிருந்தும் நாம் ஏன் குருடர்களாக உள்ளோம். இந்த நிலையை சற்றே மாற்ற எங்கள் சிறிய முயற்சி இது
நாங்கள் சிற்ப கலை வல்லுனர்கள் அல்ல,ஆனால் நல்ல ரசிகர்கள். எங்களை கவர்ந்த சிற்பங்களை உங்களுடன் எளிய முறையில் பகிர்கிறோம், அதனுடன் அவற்றை சரியான தோரணையில் காண எங்கள் சிறிய விளக்கம். நம் கலை கண்ணை திறக்க இது ஒரு பூத கண்ணாடி அல்ல, சிறு மூக்கு கண்ணாடி. சிலை பேசும் ஒலியை உங்களுக்கு எடுத்துரைக்கும் ஒலி பெருக்கி, நடக்க ஆரம்பிக்கும் குழந்தை நடை பயிலும் கை வண்டி, ஒருமுறை எங்கள் கண்ணோட்டத்தில் இந்த உயிர் ஓவியங்களை பாருங்கள்…. உள்ளம் நெகிழுங்கள். எங்களுடன் உங்கள் படங்களை பகிருங்கள்,ஒரு புதிய விழிப்புணர்வை பரப்புங்கள்.

செஞ்சிக்கோட்டை வரலாறு

செஞ்சிக்கோட்டை வரலாறு

 

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர்வாங்கியது.இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.ஜைனர்கள்
செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில்கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன.
பல்லவர் காலத்தில் செஞ்சி (கிபி 600-900)
பல்லவர் காலத்தில் சிங்கபுரதில் (சிங்கவரம்) ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சி தெற்கே பனமலை பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது , அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது , இந்த இடம் செஞ்சில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , 580-630 பல்லவ மகேந்திரவர்மன் விசித்ரசித்தன் ஆக அழைக்க பட்டார், மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில்ருந்ததாக சொல்கிறது .

சோழர்கள்
காலத்தில் செஞ்சி (900-1103)
செஞ்சி கிழக்கு பகுதில் காணப்படும் ஆனங்கூர் கல்வெட்டுக்களின் படி செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாக சொல்கிறது 871 முதல் 907 ஆதித்ய சோழன் 2 முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

பாண்டியர்கள்
காலத்தில் செஞ்சி (1014-1190)
1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கிறது.விஜயநகரப் பேரரசுக் காலத்தில்
13
ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.

செஞ்சிக் கோட்டை அமைப்பு
செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன.

இக் கோட்டை
இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது.

ராஜா தேசிங்கு வரலாறு

செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு.
மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.
மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.
முகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப். இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷாஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு.

ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை).
செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.
தேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம்.

செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.
போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது.

கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.

பொருளடக்கம்

கட்டபொம்மன் பெயர் காரணம்

அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று[1]. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்[1].
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்[1]. இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் [1] என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கை

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

போர்

கும்பினியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்
உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்
வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சற்தலை

மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்

இவற்றையும் காணவும்

நூல்கள்

  • வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு” - தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியீடு

வெளி இணைப்புகள்

தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம் என்றும் தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில் நுட்பம் என்றும் அழைக்கப்படும் இத்துறை தகவலை பரிமாறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் அடிப்படையான தொழில்நுட்பங்களை பற்றியதாகும். முக்கியமாக மின் கணினிகள், கணினி நிரல்கள் ஆகியவற்றின் உதவியுடன் தகவலை எங்கும் எப்போதும் சேமிக்கவும், மீட்கவும், பாதுகாக்கவும், மாற்றவும், அனுப்பவும், பெறவுமாக பயன்படுத்துவதாகும்.
இத்துறையிலுள்ள பிரிவுகளாவன.

 

மனிதநேயம்

மனிதர்

 

மனிதஇனம் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படி தற்கால மனிதஇனம் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல் பகுப்பாய்வு (abstract reasoning), மொழி, உண்முக ஆய்வு, பிரச்சனைகளைத் தீர்த்தல், உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. நிமிர்ந்த உடலினால் முன்னுறுப்புக்கள் (கைகள்) இரண்டும், வேறு வேலைகளைச் செய்வதற்குக் கிடைத்தன. இதனால் மனித இனம், வேறெந்த உயிரினங்களை விடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். மனிதர்கள் உலகம் முழுதும் பரந்து உள்ளனர். அன்டார்க்டிக்கா தவிர்ந்த ஏனைய எல்லாக் கண்டங்களிலும் மனிதர் பெருந் தொகையாக வாழ்கின்றனர். ஜூலை 2008 நிலைப்படி, 6.7 பில்லியனுக்கு மேற்பட்டதொகையில் மனிதர்கள் உலகில் வாழ்கின்றனர். மொத்தமாக ஏழு பில்லியன் சனத்தொகையுடன் மனித இனம் இவ்வுலகில் வாழும் மிகப்பெரிய பாலூட்டி இனங்களுக்குள் ஒன்றாக திகழ்கின்றது .மனித இனத்தின் மிகப்பெரிய அளவிலான சனத்தொகை ஆசியாவிலும் (61 %),மீதி சனத்தொகை அமெரிக்கா (14 %),ஆபிரிக்கா (14 %),ஐரோப்பா (11 %) மற்றும் ஓசியானியா (0 .5 %) போன்ற கண்டங்களிலும் வாழ்கின்றனர் . மனிதரில், ஹோமோ சப்பியென்ஸ் சப்பியென்ஸ் என்னும் ஒரு துணையினம் மட்டுமே உள்ளது.
பெரும்பாலான உயர்நிலை உயிரினங்களைப் போலவே, மனிதனும் ஒரு சமூக விலங்கு. மனிதர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் பல சிக்கலான சமூக அமைப்புக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் குடும்பங்கள் தொடக்கம் நாடுகள் வரையான அமைப்புக்கள் அடங்குகின்றன. மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், பெருமளவுக்கு வேறுபடுகின்ற, மரபுகள், சடங்குகள், நெறிமுறைகள், விழுமியங்கள், சமூக நெறிகள், சட்டங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளன.

பொருளடக்கம்

சொல்லிலக்கணமும் விளக்கமும்

மன் என்பதற்குத் தமிழில் நிலைத்த என்பது பொருளாகும். வடமொழியும் இதே பொருளில் மனுஷ் என்று மனித இனத்தைச் சுட்டிற்று. பூமியை ஆளப் பிறந்தவர்கள் என்பது பின்னாளில் விளக்கப் பொருளாயிற்று. மன் என்பதிலிருந்தே மன்னன் என்னும் சொல்லும் தோன்றிற்று. மனிதர்களை ஆள்பவன் மன்னன் என்பதன் விரிவே அது. ஆங்கிலத்திலும் இவ்வாறே மன் என்பது மேன் என்று ஆயிற்று. ஆக, உலக மொழிகளில் பலவற்றில் இந்த உட்கூற்றுடனே மனிதனைக் குறித்த சொற்கள் தோற்றம் பெற்றன.

வரலாறு

கூர்ப்பு

வாழ்விடமும் சனத்தொகையும்

ஆதி மனிதக் குடியிருப்புகள் நீர் எவ்வளவு அருகாமையில் இருக்கின்றது என்பதை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டன. அத்துடன் வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை வளங்கள், பயிரிடுவதற்கான ஏற்ற நிலம், கால்நடை வளர்ப்புக்கு ஏற்ற சூழல் என்பனவற்றோடு வேட்டையாடுவதற்கு தகுந்த விலங்கு பல்வகைமை கொண்ட சூழல் என்பனவும் கருத்தில் கொள்ளப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தனது வாழ்க்கை முறைகளை நீர்ப்பாசனம், கட்டுமானம், போக்குவரத்து, பண்டங்கள் உற்பத்தி, காடழிப்பு என்பனவற்றின் மூலம் மனிதன் புவியை மாற்றும் வல்லமை படைத்தவன். இவ்வாறான திட்டமிட்ட மாற்றங்கள் வெப்பநிலைக்கு ஏற்றவாறு தனது உறைவிடம் மற்றும் ஆடைகளை மேம்படுத்தல், கைஇருப்பில் இருக்கும் உணவின் அளவை அதிகரித்தல், வளங்களையும் மற்றும் அருகாமையில் உள்ள குடியிப்புகளையும் இலகுவாக அணுகுதல் போன்ற குறிக்கோள்கள்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.
பெரிய அளவிலான வர்த்தக மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகளின் வருகையால் வளங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்ற தேவை குறையத் தொடங்கியதுடன் பல இடங்களில் இந்தக் காரணி சனத்தொகையின் வளர்ச்சிக்கோ, வீழ்ச்சிக்கோ இனிமேலும் பின்னாலிருக்கும் சக்தியாக இல்லாமல் போனது. ஆயினும் ஒரு மனித நடைமுறை மாறும்போது அதுவே சனத்தொகை மாற்றதிற்கு முக்கிய காரணியாக அமைந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதனை எல்லா கண்டங்களிலும் குடியேற வழிவகுத்ததுடன் எல்லாத் தட்பவெட்ட நிலைகளுக்கும் ஏற்ப அவனை மாற்றிக்கொள்ளுவதற்கு உதவியது. இறுதி நூற்றாண்டுக்குள் மனிதர்கள் பாரிய குடியேற்றங்கள் சாத்தியமில்லாத போதிலும், அண்டார்ட்டிக்கா, பெருங்கடல் ஆழங்கள் மற்றும் விண்வெளி போன்றவற்றை ஆராய்ந்துள்ளனர்.
அண்டார்டிகா மற்றும் விண்வெளி போன்ற இடங்களில் மனிதனின் வாழ்வது மிகவும் பணச்செலவு மிக்கதும் குறிப்பிட்ட காலவரையரைக்கும் உட்பட்டதாகும். தற்போது இவ்விடங்கள் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டும் உபயோகிக்கப்படுகிறது.1969க்கும் 1972க்கும் இடையில் இரண்டு மனிதர்கள் ஒரே தடவையில் நிலவில் குறிப்பிட்ட நேரத்தை செலவழித்துள்ளனர். அன்றிலிருந்து ஆடி 2012 வரை எந்த மனிதனும் எந்த ஒரு இயற்கையான விண்வெளி உடலிலும் கால்தடம் பதிக்கவில்லை. இருப்பினும் 2000 மாம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினால் குறிப்பிட்ட அளவு மனித நடமாட்டம் விண்வெளியில் காணப்படுகிறது. அத்துடன் மனிதனினால் உருவாக்கப்பட்ட சில விண்வெளி ஓடங்கள் குறிப்பான சில விண்வெளி உடல்களுக்கு பயணம் செய்துள்ளன.
1800 ஆம் ஆண்டளவில் ஒரு மில்லியனிலிருந்த மனித சனத்தொகை தற்போது எழு பில்லியனை கடந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உலக சனத்தொகையின் 39 .7 % மக்கள் நகர்புறங்களை அண்டி வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டது. இந்த அளவு 21 ஆம் நூற்றாண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

உயிரியல்

உளவியல்

மனித மைய நரம்பு மண்டலத்தின் முக்கியமான மைய பகுதியாக மனித மூளை செயற்படுவதுடன் மொத்த சுற்று நரம்பு மண்டலத்தையும் கட்டுப்படுத்தும் உறுப்பாக செயற்படுகிறது. மனித மூளையானது சுவாசம்,உணவு சமிபாடு போன்ற எண்ணாமல் தானாக நிகழ்கிற நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கு மேலதிகமாக நினைவுகள், பகுத்தறிவு மற்றும் கற்பனைவாதம் போன்ற மேம்பட்ட சிக்கலான நிகழ்வுகளையும் ஆள்கிறது.இவ்வகையான புலனுணர்வுகள் மனம் எனும் எண்ணக்கருவை உருவாக்குவதுடன் இதன் நடத்தை ரீதியான விளைவுகள் உளவியல் துறையில் விரிவாக ஆராயப்பட்டும் படிக்கப்பட்டும் வருகின்றன.
பொதுவாக இவ்வகையான சிக்கலான நடவடிக்கைகளை கையாளக்கூடிய ஆற்றல் கொண்ட மனித மூளை இதுவரை அறியப்பட்ட விலங்குகளிலேயே அதிக நுண்ணறிவு ஆற்றல் கொண்டதாக உள்ளது .இவ்வுலகில் உள்ள ஏனைய சில விலங்குகளாலும் அவைகளின் உள்ளுணர்வு மற்றும் விகடம் என்பவற்றைக் கொண்டு எளிய கட்டமைப்புகள் ,கருவிகள் பொன்றவற்றை உருவாக்க முடிந்தாலும் .மனிதனின் இம்மூளை கட்டமைப்பானது எல்லாவற்றிலும் மிக பரந்ததாகவும் மிக சிக்கலானதாகவும் கருதப்படுகிறது .அத்துடன் இது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக மேம்பட்ட மாற்றங்களை அடைந்து வருகிறது.

உறக்கமும் கனவுகளும்

மனிதர்கள் வழமையாக பகலில் அவர்களது நாளாந்த செயல்பாடுகளையும் இரவில் உறங்குதல் எனும் செயற்பாட்டையும் மேட்கொள்கின்றனர். ஒரு வயதுக்கு வந்த மனிதன் சராசரியாக எழு தொடக்கம் ஒன்பது மணித்தியாலங்களும் ஒரு குழந்தை சராசரியாக ஒன்பது தொடக்கம் பத்து மணித்தியாலங்களும் தூங்க வேண்டும். இருப்பினும் இச்சராசரி தூக்கத்தை விட குறைந்த அளவு தூக்கத்தை பெறுவது பல மனிதர்களிடையே வழமையாக காணப்படுகிறது. இவ்வாறு தேவையான உறக்கத்தை பெறாமல் இருப்பது உடல் சுகாதாரதிற்கு உகந்ததல்ல. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மனித உறக்கத்தை நான்கு மணித்தியாலங்கள் கட்டுப்படுத்துவது மனிதர்களுக்கு குறைவான நினைவாற்றல், உடல் அசௌகரியம் போன்ற உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தின் போது கனவுகள் ஏற்படுகின்றது. கனவுகளின் போது மனிதர்கள் தொடர்ச்சியான புலன்கள் சார்ந்த படங்கள் மற்றும் ஒலிகளை அனுபவிக்கிறார்கள். அத்துடன் கனவு காணும் நபர் கனவை அவதானிப்பவர் என்பதை விட அக்கனவில் தானும் ஒரு கதாபாத்திரமாக (உண்மையில் நடப்பது போன்று)உணருவர். கனவுகள் அனேகமாக துரித கண் இயக்கத் தறுவாய்( REM phase of sleep) தூக்கத்தின் போது ஏற்படுகின்றது, அத்துடன் இவை மனித மூளையின் தண்டில் உள்ள போன்ஸ் எனும் அமைப்பினால் தூண்டப்படுகின்றன.

உணர்வு மற்றும் சிந்தனை

கலாச்சாரம்

மனிதர்கள் பெரிய சிக்கலான சமூக குழுக்களாக வாழ முனைகின்றனர். ஏனைய எல்லா விலங்குகளையும் விட ,மனிதர்கள் சுய வெளிப்பாடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து பரிமாறவும், சிந்தனைகளை வெளிப்படுத்துவதுடன் குழுவாக இணைந்து செயற்படவும் நிபுணத்துவம் பெற்றுள்ளதால் ஒத்துழைப்பு மற்றும் போட்டியிடும் குழுக்கள் கொண்ட சிக்கலான சமூக கட்டமைப்புகளை மனிதர்கள் உருவாக்கியுள்ளனர். மனித குழுக்களின் அளவுகள் ஒரு தனி குடும்பத்தில் இருந்து ஒரு பெரிய நாடு வரை பரந்து காணப்படுகிறது. மனிதர்களுக்கு இடையிலான சமூக பரிவரத்தனைகள் ஆனது சிறந்த கலாச்சார மதிப்புகள், சமூக நெறிகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்களை போன்ற விடயங்களை உருவாக்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட விடயங்கள் மனித சமூகத்தின் அடிப்படை மூலங்களாக திகழ்கிறது.
கலாச்சாரமானது மனிதர்களின் சிக்கலான அடையாள(அடிப்படை ) நடத்தைகள் என இங்கு வரையறுக்கபடுகிறது. உதாரணமாக பிறப்பிலேயே மனிதர்களுடன் உடனிணைந்து காணப்படாமலும், சமூக தொடர்புகள் மூலம் மட்டுமே கற்றுக்கொள்ள கூடியதுமான அனைத்து நடத்தைகளும் ஆகும். மொழி, சடங்கு, சமூக அமைப்பு, மரபுகள், நம்பிக்கைகள், தொழில்நுட்பம் என்பவை இவற்றுள் அடங்கும்

மொழி

தனது தகவல்களையும், கருத்துக்களையும் பேச்சு (மற்றும் எழுத்து ) மூலம் வெளிப்படுத்தும் மனித ஆற்றலானது மற்றய உயிரினங்களுடன் ஒப்பிட முடியாத ஒன்றாகும். மற்றய விலங்கினங்களின் மூடிய குறி அமைப்புகளை போலல்லாமல் மனிதர்களின் மொழி திறந்த அமைப்புடையது அத்துடன் குறிப்பிட்ட அளவு ஒலிகளையும் சொற்களையும் கொண்டு முடிவற்ற எண்ணிக்கையான அர்த்தங்களை உருவாக்கும் வல்லமை படைத்தது.