வையம் முழுதும்கண்ணிகள் | ||
வையம் முழுதும் படைத்தளிக் கின்ற மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்; செய்யும் வினைகள் அனைத்திலும் வெற்றி சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே! பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற் புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்; வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை மேன்மையுறச் செய்தல் வேண்டு மென்றே! வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை மேவிடும் சக்தியை மேவு கின்றோம்; ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாங்கள் அறிந்திட வேண்டு மென்றே! உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந் தோங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்; பயிரினைக் காக்கும் மழையென எங்களைப் பாலித்து நித்தம் வளர்க்க வென்றே. |
dvdfv
Saturday, December 15, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment