பல நேரங்களில் நம் கண் முன்னே செல்லும் காட்சிகள் நம் அகக் கண்முன்னே தெரிவதில்லை.
அதே போல் சில நேரங்களில் நாம் கண்ட ஒரு காட்சி - ஒரு சம்பவம் - ஒரு உணர்வு - ஒரு மனிதர் - ஒரு நூல் …. நமது ஒவ்வொரு உணர்வையும் தட்டி எழுப்பி,வாழ்வின் ஜீவ நாடியை உலுக்கும்.
அதன் பின்னர் நம் வாழ்கை திசை திரும்பும். அவ்வாறு திரும்பிய எங்கள் வாழ்வின் விளைவே இந்த தளம். எங்களை கரை சேர்த்த கலங்கரை விளக்கம் அமரர் கல்கி ,அவரது காவியங்கள். ஏதோ விட்ட குறை தொட்ட குறை என்று உறங்கிக் கொண்டிருந்த எங்கள் உள் உணர்வை உயிர்ப்பித்து,ஒரு மகத்தான வரலாற்றை , அரிய கலைப் பெட்டகத்தை பொன் ஏட்டில் பதிக்கவேண்டிய ஒரு கலையை வீணடிக்கும் அவலத்தை உணர்த்தியது. அதன் விளைவே இந்த தளம்..
சிற்ப கலை - கருங்கல்லில் காவியங்கள் என்று தொன்று தொட்டு திகழும் இந்த அறிய செல்வங்கள் இப்போது அழிந்து வருகின்றன.
எதனால் ?
ஆயிரம் ஆண்டு நின்று சிரித்த இந்த கல் ஓவியங்களை ரசிக்க இப்போது ஆள் இல்லை. ரசிக்க தெரிந்தால் இவற்றை சிதைய விடுவோமா ? அரசனும் ஆண்டியும் போற்றி வளர்த்த கலை….சிற்பம் நாட்டியம் வாய்பாட்டு ஆன்மீகம் என்று ஒரு சமுதாயத்தை தாங்கி குடை பிடித்த மண்டபங்கள் இப்போது தங்கள் தூண்களே சிதைந்து ஆட்டு புழுக்கையும் , வெளவால்கள் குழுமும் அவலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர் …இன்று விழிப்புணர்வு இல்லாமையால் அரசின் கண்ணில் இருந்து விலகி நலிந்து மடியும் தருவாயில் உள்ளது இந்த கலை மட்டும் அல்ல அந்த கலை சின்னங்களும் தான்.
ஆடைகளை களைவது போல் இவை ரசிகர் மனதில் இருந்து பிரிந்தது எதனால்? எங்கோ அமெரிக்கா ஜப்பான் என்று உலகெங்கிலும் இருந்து ரசிகர்களை தன் வாசம் ஈர்க்கும் இவை என் நமது கவனத்தை ஈர்க்கவில்லை. கண்ணிருந்தும் நாம் ஏன் குருடர்களாக உள்ளோம். இந்த நிலையை சற்றே மாற்ற எங்கள் சிறிய முயற்சி இது
நாங்கள் சிற்ப கலை வல்லுனர்கள் அல்ல,ஆனால் நல்ல ரசிகர்கள். எங்களை கவர்ந்த சிற்பங்களை உங்களுடன் எளிய முறையில் பகிர்கிறோம், அதனுடன் அவற்றை சரியான தோரணையில் காண எங்கள் சிறிய விளக்கம். நம் கலை கண்ணை திறக்க இது ஒரு பூத கண்ணாடி அல்ல, சிறு மூக்கு கண்ணாடி. சிலை பேசும் ஒலியை உங்களுக்கு எடுத்துரைக்கும் ஒலி பெருக்கி, நடக்க ஆரம்பிக்கும் குழந்தை நடை பயிலும் கை வண்டி, ஒருமுறை எங்கள் கண்ணோட்டத்தில் இந்த உயிர் ஓவியங்களை பாருங்கள்…. உள்ளம் நெகிழுங்கள். எங்களுடன் உங்கள் படங்களை பகிருங்கள்,ஒரு புதிய விழிப்புணர்வை பரப்புங்கள்.

No comments:
Post a Comment