ஜெ. கமலநாதன்
முன்னாள் இயக்குநர், சென்னை வானொலி
வெற்றி பெறவேண்டும் என்றஆசை நம் எல்லோருக்குள்ளும் இருக்கின்றது. ஆனால் எப்படி வெற்றி பெறவேண்டும் என்றவழிமட்டும் புலப்படுவதில்லை. அதுகூட பரவாயில்லை. எதில் வெற்றி பெறவேண்டும் என்பது கூட பலருக்குத் தெரிவதில்லை என்பதுதான் கொடுமை.
ஒவ்வொரு படைப்புக்கும் கடவுள் ஒரு நோக்கத்தை வைத்தே பூமிக்கு அனுப்பியிருக்கின்றார். அந்த படைப்பின் நோக்கம் தெரிந்து செயல்பட்டாலே போதும். வெற்றி நிச்சயம்! தண்டவாளத்தில் ஓடுகின்றரயில், தார்சாலையில் ஓடுகின்றபேருந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு வானில் சீறிப்பாயும் ஜெட் விமானம் என்று எல்லோருக்கும் ஒரு சென்றடையும் (Destination) இலக்கு இருக்கிறது. ஆனால் பல இளைஞர்களுக்கு தான் என்னவாகப் போகிறோம் என்பதே உறுதியில்லாத நிச்சயமற்றநிலை இருப்பது வருந்தத்தக்கது. சிறு உணவுத்துணுக்கை இழுத்துச் செல்லும் எறும்புகூட தான் சென்றடைய வேண்டிய இடம் எது என்று உணர்ந்து வைத்திருக்கிறது. ஆனால் பட்டப்படிப்பு படிக்கும் பல மாணவர்களுக்கு தனது இலக்கு எது என எந்த சிந்தனையும் கிடையாது.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்க்கு ‘நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்கள்’ என்று கட்டுரைப்போட்டி வைப்பார்கள். குழந்தைகள் நான் கலெக்டர் ஆக விரும்புகிறேன், நான் டாக்டர் ஆக விரும்புகிறேன். நான் பெரிய தலைவராக விரும்புகிறேன் என்று எழுதுவார்கள். இது ஒரு நல்ல மனநலப் பயிற்சி ஆகும். எந்த உயரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றஉந்துதலை இது தரும். உயரங்கள் மாறிப்போகலாம். டாக்டர் ஆக விரும்பியவன் I.T. என்ஜினியர் ஆகி இருக்கலாம். I.A.S. படித்து கலெக்டர் ஆக விரும்பியவன் ஒரு Electrical கம்பெனியின் M.D. ஆகி இருக்கலாம். தலைவன் ஆக விரும்பியவன் தலைமை ஆசிரியர் ஆகி இருக்கலாம். இதில் வருந்துதலுக்கு ஏதுமில்லை. நீங்கள் அடைய விரும்பிய உயரம் மாறி இருக்கலாம். ஆனால் வேறு ஒரு உயரத்தை நீங்கள் அடைந்திருப்பீர்கள் என்பது உறுதி.
டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் என் உயர்நிலைப்பள்ளி நாட்களின் போது இலட்சியமாக இருந்தது. அதற்குரிய வாய்ப்பு கிடைக்காமல் B.A., M.A. ஆங்கில இலக்கியம் படிக்க நேர்ந்தது. வானொலியின் அறிவிப்பாளராக சேரும் வாய்ப்பு வந்து இயக்குநர் என்னும் மிகப்பெரிய பொறுப்பு வரை கிடைத்தது. சென்னை வானொலி இயக்குனர் ஆகி தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களுக்கும் தலைவர் ஆகும் உயர்நிலை வந்தது. மருத்துவர் ஆகும் கனவு மடிந்து போனாலும் இன்னொரு துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பினை இறைவன்தான் கொடுத்தார் என்று திடமாக நம்புகிறேன்.
“ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும். மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விடாதே” என்ற ஆங்கில அறிஞர் ஒருவரின் கூற்று நினைவுக்கு வருகின்றது.
டாக்டர் A.P.J. அப்துல்கலாம் அவர்கள் விமானவியல் துறையின் உயர்பதவிக்கான U.P.S.C. தேர்வு எழுதிவிட்டு காத்திருந்தார். கிடைக்கவில்லை. மனம் சோர்ந்து சுவாமி சிவானந்தரிடம் சென்றார். “மகனே, கவலைப்படாதே. ஒரு கதவு மூடப்பட்டாலும் இன்னொரு கதவு திறக்கும். உனக்கு வேறொரு பொறுப்பு காத்திருக்கிறது. சோர்வகற்றிப் பாடுபடுÐ எல்லாம் நல்லபடி நடக்கும்Д என்று ஆசி கூறி அனுப்பினார். அதற்குப் பிறகு நடந்தவை தான் அதிசய நிகழ்வுகள் ஆயின. அணுவியல் துறையில் பொக்ரான் குண்டுவெடிப்பு பரிசோதனையில் உலகத்தையே இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த இந்த அறிவியல் சாதனையாளர், பின்னாளில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒன்றிணைந்து தேர்வு செய்த குடியரசுத் தலைவர் ஆனார். இந்தியத் திருநாட்டின் அனைத்து மக்களும் நேசிக்கும் அரும்பெரும் தலைவரானார்.
இளைஞர்கள் இளம் வயதிலேயே இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். பின்னாளில் அந்த குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாவிட்டாலும் வேறொரு சிகரத்தைத் தொடக்கூடிய வாய்ப்பு வந்து சேரும் என்பது உறுதி. இலக்கு இல்லாத பயணம் என்பது ஏதும் இல்லை. பயணம் புறப்படும்போதே எங்கு சென்று சேர வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்கின்றோம். அதுபோல வாழ்க்கை எனும் பயணத்திற்கும் சென்றடைய வேண்டிய இலக்கு எதுவென முடிவெடுத்து செயல்பட வேண்டும். அப்படி இலக்கினை தீர்மானத்துக் கொண்டாலே சென்றடையும் வழி என்பதும் தீர்மானிக்கப்பட்டுவிடும். சென்னையிலிருந்து திருச்சி செல்லவேண்டும் என்று தீர்மானித்தவுடன் பேருந்திலா? தொடர் வண்டியிலா? காரிலா என்றும் தீர்மானித்துக் கொள்கின்றோம் அல்லவா? அதுபோலவே, நாம் வாழ்க்கையில் அடைய வேண்டிய இடத்தைப் பற்றி முடிவெடுத்துக் கொண்டால் அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் வகையாக வகுத்துக் கொள்ள இயலும்.
தடுமாற்றமில்லாத, தயக்கமில்லாத கனவுச் சித்திரம் ஒன்றை மனதில் வரைந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ‘என்னவாக விரும்புகிறோம்’ என்று ஆசைப்படுவது உயர்நிலைப் பள்ளிப் பருவம். ‘அந்நிலையை அடைய என்ன செய்யப்போகிறோம், எந்தெந்த அறிவுக்கூர்மை பயிற்சிகளை, பண்புநலன் மேம்பாட்டுப் பயிற்சிகளை, நேரக்கட்டுப்பாட்டு பயிற்சிகளைக் கைக்கொள்ளப் போகிறோம்’ என்று முடிவெடுத்து செயல்படுத்துவது கல்லூரிப்பருவம் என்பதை இளைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
Destination an Journey என்ற அளவில் சில தீர்மானங்களை கல்லூரிப் பருவத்தில் வகுத்துக்கொண்டால் பிறகு எல்லாமே எளிதாகிவிடும். இலக்கு, வழி இந்த இரண்டிலுமே எந்த தீர்மானமும் இல்லாத இளைஞனுக்கு எல்லாமே கண்ணைக்கட்டி காட்டில் விட்டமாதிரி இருக்கும். அச்சம் இதயத்தை கவ்வி நிற்கும். கலக்கமும், மயக்கமும், தயக்கமும், சோர்வும், தளர்ச்சியும், களைப்பும் ஏற்படும். இது அவர்களை ‘தற்காலிக தப்பித்தலுக்காக’ தீயபழக்கங்களை நோக்கி அழைத்துச் சென்றுவிடும். இந்த போதைப் பழக்கங்களால் தீய நட்பும், தன்னம்பிக்கை இழப்பும், பண்புநலன் சீர்கேடும் உண்டாகும்.
“We always have a choice.We can always choose between right and wrong” என்கிறார் தன்னம்பிக்கைச் சிந்தனையாளர் ராபின் ஷர்மா. கல்லூரிப் பருவத்தில் இளைஞர்கள் தேர்வு செய்யும் பாதை தான் அவர்களது வாழ்க்கையின் முழுமையான பிரகாசத்தையோ, இருட்டையோ தீர்மானிக்கிறது. இந்த ஒப்பிடற்கரிய பொன்னான கல்லூரிப் பருவத்தில் முடிவெடுக்க தயக்கம் காட்டினால், 70 வயது வரை அல்லல்பட நேரலாம். கல்லூரிப் பருவத்தில் இலக்கையும் அதை அடைதலுக்குரிய வழிகளையும் தீர்மானித்துக் கொண்டால் 70 வயது வரை இன்பமாக வாழலாம்.
இதைத்தான் ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்கிறார்கள். “You become what you want to become” என்றார் கார்லே என்ற பேரறிஞர். ‘என்னவோ நடக்கிறபடி நடக்கட்டும்’ என்று புலம்பிக் கிடப்போர் சிலர்; ‘படிக்க வைக்கும் பெற்றோர் வேலையும் வாங்கித் தருவார்கள்’ என்று அவர்கள் மீது பொறுப்பைத் தள்ளிவிட்டு சும்மா அலைவோர் பலர்; ‘எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் வேலை கிடைக்கவா போகிறது?’ என்று தத்துவம் பேசுவோர் சிலர். இப்படிப்பட்டவர்களுக்குத்தான் நான் சொல்கிறேன், “தயக்கமில்லாமல், அச்சமில்லாமல் உங்கள் எதிர்காலத்தையும் அதை அடைவதற்கான வழிகளையும் திடமாக வகுத்துக் கொள்ளுங்கள்; மற்ற எல்லாம் நல்லபடி நடக்கும்..

No comments:
Post a Comment